சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் இன்றைய நிலைமை
சர்வ சிக்ஷா அபியான் திட்டம்
ஆறு
முதல் பதினான்கு வயதுடைய குழந்தைகள் அனைவருக்கும் தொடக்க கல்வியை வழங்குவதே
அரசாங்கத்தின் முக்கியத் திட்டம் என்பது தெரியும். குழந்தைகளின் சேர்க்கையை
அதிகரித்தல், தக்கவைத்தல் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்துதல் போன்றவை மூலம்
குழந்தைகள் கற்றல் அடைவை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இது
பல்வேறு சமூக பிரிவுகளுக்கு இடையேயுள்ள பாலின வேறுபாடுகளையும், இடைவெளிகளையும்
இணைக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது. 1998ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் மாநிலக்
கல்வி அமைச்சர்கள் வழங்கி பரிந்துரைகளை தொடர்ந்து 2001ஆம் ஆண்டு சர்வ சிக்ஷா
அபியான் (SSA) தொடங்கப்பட்டது.
2002 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட
அரசியலமைப்பில் 86வது சட்ட திருத்தத்தில் தொடக்கக் கல்வி என்பது அடிப்படை உரிமையாக
அமைந்தது. மேலும் தொடக்கக் கல்வியை இலவசமாக வழங்குவதற்கான குழந்தைகளுக்கான இலவச
மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை ஆகஸ்ட் 2009 ஆம் ஆண்டு வரை
பாராளுமன்றத்தில் வெளியிடப்படவில்லை.
சர்வ சிக்ஷா அபியானின் குறிக்கோள்கள்
- அனைத்து குழந்தைகளும், பள்ளி கல்வியை
உறுதிப்படுத்தும் மையம் மற்றும் மாற்றுப் பள்ளி, முகாமிற்கு பின் மீண்டும்
பள்ளியில் சேர்ந்து இருப்பதை உறுதி செய்தல்.
- அனைத்து குழந்தைகளும் ஐந்து ஆண்டுகள் முழுமையாக
ஆரம்பப் பள்ளிப் படிப்பை முடித்திருத்தலை உறுதி செய்ய வேண்டும்.
- அனைத்து குழந்தைகளும் எட்டு ஆண்டுகள் தொடக்க
பள்ளிப்படிப்பை முடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- வாழ்க்கைக்கான கல்வியில் திருப்திகரமான தரத்தை
அடைய வலியுறுத்துவதே தொடக்கக் கல்வியின் நோக்கமாகும்.
- சமூக மற்றும் பாலின சமத்துவ இடைவெளிகளை ஆரம்ப
நிலையிலும் தொடக்கக் கல்வி நிலையிலும் இணைத்தல்.
- பள்ளியில் சேர்ந்த அனைத்து குழந்தைகளையும் தக்க
வைத்தலை உறுதி செய்தல்.
- ஒட்டுமொத்த கட்டமைப்பிற்குள் மாநிலங்கள் பாடப்
பொருள் சார் குறிப்பிடத்தக்க வழிமுறைகளை உருவாக்கிக் கொள்ள அனுமதித்தல்.
- உள்ளூர் சிறப்புகளை பிரதிபலிக்க, ஒவ்வொரு
மாநிலங்களில் உள்ள மாவட்டங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில்
ஊக்கப்படுத்துகிறது.
- பரந்த தேசிய கொள்கை விதிமுறைகளின் அடிப்படையில்
உள்ளூர் தேவையின் அடிப்படையான திட்டமிடலை ஊக்குவிக்கிறது.
- பரந்த தேசிய நெறிகளை பயன்படுத்துவதன் மூலம் ஒரு
யதார்த்தமான திட்டமிடலை உருவாக்குதல்.
இதன் நோக்கம் தேசியளவில் ஒரே மாதிரியான கல்வியை அடைவதற்கு அந்தந்த
மாநிலங்களில் உள்ள மாவட்டத்தில் அவர்களுக்குரிய முறையில் கட்டமைப்புகளை ஏற்படுத்தி
கால வசதிக்கு ஏற்ப உருவாக்குவதே ஆகும். 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தை களை
பல்வேறு வகையான உத்திகளை பயன்படுத்தி பள்ளிக்கு வெளியே உள்ள குழந்தைகளை பள்ளியில்
சேர்ந்து 8 வருட பள்ளிக் கல்வியை முடிக்க செய்வதே இதன் முக்கிய நோக்கமாக
வலியுறுத்தப்படுகிறது.
பாலின சமத்துவம் மற்றும் சமுதாய இடைவெளியை இணைப்பின் மூலம் சரியான
தாக்கத்தை பள்ளிகளில் ஏற்படுத்தி குழந்தைகளை பள்ளிகளில் இருக்கச் செய்வதாகும்.
இதன் கட்டமைப்பிற்குள் பொருத்தமான கல்வி முறையை ஏற்படுத்துவதன் மூலம்
குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் பயன் உள்ள வகையில் பள்ளிக் கல்வி முறையை
அவர்களுடைய சூழ்நிலை மற்றும் சமூக சூழ்நிலைகளை புரிந்து உணர வைக்கிறது.
உதவித்தொகை
செங்கல் சூளைகள் உட்பட கூலி வேலை பார்த்து பிழைப்பை ஓட்டுவதற்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளும் இந்த திட்டத்தால் பயன் பெற்றுள்ளனர் கூலிவேலை பார்க்கும் ஒரு சிறுவனின் தாய் கூறுகையில், ‘அரசு பள்ளிக்கு சென்று வருவதற்கு கூட செலவிட இயலவில்லை. எனது மகன் படிப்பதற்கு ₹400 உதவித்தொகை கிடைக்கும். ஆனால், மார்ச் மாதத்துக்கு பிறகு கிடைக்கவில்லை’ என்றார்.
சிறப்பு பயிற்சி மையங்கள்
குழந்தை தொழிலாளர் திட்ட பணியில் ஈடுபட்ட ஒருவர் கூறுகையில், ‘‘தேசிய
குழந்தை தொழிலாளர் திட்டம் போல சமக்ர சிக்ஷா திட்டம் செயல்படுவதில்லை. சில பகுதிகளில்
மாணவர்கள் 5 முதல் 10 கி.மீ தூரம் பள்ளிகளுக்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதற்கு
சமக்ர சிக்ஷா திட்டம் உதவுவதில்லை. தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் 1988ம்
ஆண்டில் இருந்தே அமலில் உள்ளது. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 2 லட்சம் பேர் மீட்கப்பட்டு
பயிற்சி மையங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1.2 லட்சம் குழந்தைகள் பள்ளிகளில்
சேர்க்கப்பட்டு கல்வி பெற்றுள்ளனர். தமிழகத்தில் குறிப்பாக திருச்சியில் மட்டும்
28,000 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, அவர்களில் 11,000 பேர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்’’
என்றார்.
இதற்காக நாடு முழுவதும் 59 மாவட்டங்களில் கடந்த ஆண்டு மார்ச் 31ம்
தேதிப்படி 1225 சிறப்பு பயிற்சி மையங்கள் உள்ளதாகவும், இவற்றில் 33,573 குழந்தை தொழிலாளர்கள்
சேர்க்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
இந்த மையங்களின் தலைவராக, மாவட்ட நீதிபதி பொறுப்பு வகிப்பார். பிற மாநிலங்களை விட அதிகபட்சமாக
தமிழகத்தில் மட்டும் 15 மாவட்டங்களில் மொத்தம் 233 மையங்கள் உள்ளன.
நின்றுபோன உதவித்தொகை
தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் கீழ் மீட்கப்பட்டு பயிற்சி
மையத்தில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதம் ₹150 வீதம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
பின்னர். 2017 பிப்ரவரி மாதம் இந்த தொகை மாதம் ₹400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால்,
அதன் பிறகே இந்த நிதியுதவி பெரும்பாலானோருக்கு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.
இதுதொடர்பாக திருப்பூர் எம்பி சுப்பராயன் ஓராண்டு முன்பு திட்டஇயக்குநருக்கு எழுதிய கடிதத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதுமட்டுமின்றி, திட்டத்தில் பணியாற்றிய சிலருக்கு சரிவர சம்பளம் வழங்கப்படவில்லை எனவும்
குற்றச்சாட்டு நிலவுகிறது.
கொரோனா ஊரடங்கால் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிப்பு
கொரோனா ஊரடங்கு, உலக பொருளாதாரத்தையே புரட்டிப் போட்டு விட்டது.
இந்தியாவிலும் 2 ஆண்டுகளாக நீடித்த ஊரடங்கால் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்ட குடும்பங்கள்
ஏராளம். வாழ்வாதாரம் பறிபோனதால் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்தில் குழந்தைகள் வேலைக்கு
செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. யூனிசெப் நிறுவனம் கடந்த ஆண்டு சமர்ப்பித் ஆய்வறிக்கையின்படி,
உலக அளவில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை 16 கோடியாக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5 முதல் 14 வயதுக்கு
உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 25.96 கோடி பேர். இவர்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர்
வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதாவது, 2001க்கும் 2011க்கும் இடைப்பட்ட காலத்தில்
26 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்துள்ளனர். நாட்டில் உள்ள மொத்த குழந்தை
தொழிலாளர்கள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம்,
ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ளவர்கள் மட்டும் சுமார் 55 சதவீதம் பேர் என்பது மக்கள் தொகை
கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘குழந்தை
தொழிலாளர்கள் குறித்து முறையான கள ஆய்வு மேற்கொள்ள வேண்டியது அவசியம்’’ என வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு வெளியிட்ட குழந்தை தொழிலாளர் குறித்த ஆய்வறிக்கையின்படி, கொரோனா
காலத்தில், அதாவது 2019ம் ஆண்டுக்கு பிறகு குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை 2.8 மடங்கு
அதிகரித்துள்ளது என தெரிய வந்துள்ளது.
திட்டத்தின் செயல்பாடுகள்
குழந்தைத் தொழிலாளர் திட்டத்துக்காக நாடு முழுவதும் மாவட்டம் தோறும் மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் உள்ளவர்கள்தான், குழந்தை தொழிலாளர்கள் பற்றிய தகவல் கிடைத்ததும் அவர்களை மீட்டு கல்வி கிடைக்க வழி வகை செய்கின்றனர். தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ் 9 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட, கூலி வேலைகளில் ஈடுபடுத்தப்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டு, இந்த மையத்தின் சிறப்பு பயிற்சி மையத்தில் சேர்க்கப்படுவார்கள். அவர்களுக்கு கல்வி கற்பிப்பது, தொழில் படிப்புகள், மதிய உணவு, கல்வி உதவித்தொகை, உடல் நலத்தை பேணுவதற்கான நடவடிக்கைகள் உட்பட அனைத்தும் இங்கு மேற்கொள்ளப்படும். அதன் பிறகே அவர்கள் வழக்கமான கல்வித்திட்டத்தின் கீழ் பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள்
Comments
Post a Comment