.jpeg)
கிரிப்டோகரன்சி What is Cryptocurrency? | கிரிப்டோ கரன்சி என்றால் என்ன? கிரிப்டோ கரன்சி என்பது உலக அளவில் அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு டிஜிட்டல் அல்லது மெய்நிகர் கரன்சியாகும் (Virtual Currency). இந்த கரன்சிகள் க்ரிப்டோகிராபி (Cryptography) மூலம் பாதுகாக்கப்படுகிறது. பொதுவாக நாம் ஒரு பொருளையோ அல்லது சேவையையோ வாங்கும்போது, அதற்க்கான பணத்தை நம் கையில் இருக்கும் ருபாய் நோட்டுகளாக கொடுப்போம். கிரிப்டோ கரன்சிகளும் அதே போல தான், கிரிப்டோ கரன்சியை பயன்படுத்தி ஒரு பொருளையோ, சேவையையோ வாங்க முடியும். ஆனால் அவை தொட்டு பார்க்க முடியாத டிஜிட்டல் வடிவில் கரன்சிகளாக இருக்கும். ஒரு நாட்டின் கரன்சியானது அந்த நாட்டில் மட்டுமே செல்லத்தக்கது ஆகும். ஆனால் பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகள் உலகம் முழுவதும் செல்லத்தக்கது ஆகும். ஒவ்வொரு நாட்டின் பணத்தையும் அந்த நாட்டின் ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்துகிறது. ஆனால் கிரிப்டோ கரன்சியை எந்த ஒரு வங்கியோ, நாடோ கட்டுப்படுத்த முடியாது. ஒரு இணைய இணைப்பு இருந்தாலே கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். கிரிப்டோ கரன்சிகள் மைனிங் (Mining) என்ற முறையில் ...