சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் இன்றைய நிலைமை

சர்வ சிக்ஷா அபியான் திட்டம் ஆறு முதல் பதினான்கு வயதுடைய குழந்தைகள் அனைவருக்கும் தொடக்க கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின் முக்கியத் திட்டம் என்பது தெரியும். குழந்தைகளின் சேர்க்கையை அதிகரித்தல், தக்கவைத்தல் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்துதல் போன்றவை மூலம் குழந்தைகள் கற்றல் அடைவை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இது பல்வேறு சமூக பிரிவுகளுக்கு இடையேயுள்ள பாலின வேறுபாடுகளையும், இடைவெளிகளையும் இணைக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது. 1998ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் மாநிலக் கல்வி அமைச்சர்கள் வழங்கி பரிந்துரைகளை தொடர்ந்து 2001ஆம் ஆண்டு சர்வ சிக்ஷா அபியான் (SSA) தொடங்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அரசியலமைப்பில் 86வது சட்ட திருத்தத்தில் தொடக்கக் கல்வி என்பது அடிப்படை உரிமையாக அமைந்தது. மேலும் தொடக்கக் கல்வியை இலவசமாக வழங்குவதற்கான குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை ஆகஸ்ட் 2009 ஆம் ஆண்டு வரை பாராளுமன்றத்தில் வெளியிடப்படவில்லை. சர்வ சிக்ஷா அபியானின் குறிக்கோள்கள் அனைத்து குழந்தைகளும், பள்ளி கல்வியை உறுதிப்படுத...