மருந்துகளின் காப்புரிமை
இந்திய மருந்துகளின் காப்புரிமைச் சட்டம்
முதல் இந்திய காப்புரிமைச் சட்டம் 1856 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது, இது 1911 ஆம் ஆண்டில் மிகவும் விரிவான காப்புரிமை மற்றும் வடிவமைப்புச் சட்டமாக மாற்றப்பட்டது. 1911 ஆம் ஆண்டின் சட்டம் மருந்துகள் மற்றும் மருந்துகளுக்கான தயாரிப்பு காப்புரிமைகளுக்கு அனுமதித்தது. அதன் விளைவால் வெளிநாட்டு நிறுவனங்கள் அல்லது எம்.என்.சி-கள் ஒரு முழுமையான ஏகபோகத்தை அனுபவித்து, அதிக விலைகளை வசூலித்தன. முக்கியமாக தங்கள் நாட்டிலிருந்து மருந்துகளை இறக்குமதி செய்து 80% சந்தையை கட்டுப்படுத்தி வந்த எம்.என்.சிக்கள், அதேநேரத்தில் இந்தியாவில் மருந்து உற்பத்தி மையங்களை நிறுவ நிதி முதலீடு மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் முன்வரவில்லை.
1970 புதிய இந்திய காப்புரிமைச் சட்டம், காப்புரிமையில் மருந்துப் பொருளை சேர்க்கக் கூடாது. ஆனால்,
அதன் உற்பத்தி செய்யும் செயல்முறையை மட்டுமே வேறு யாரும் காப்புரிமையில் மீறமுடியாது என்று
கூறியது.
காப்புரிமை பெற்ற மருந்துகளின் உற்பத்தியை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது: மன்சுக் மாண்டவியா
இன்று, இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான ஜெனரிக் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன.
மருந்துகள் உற்பத்தியில் இந்தியா சர்வதேச அளவில் முன்னோடியாக உள்ளது அதுமட்டுமில்லாமல் காப்புரிமை பெற்ற மருந்துகள் தயாரிப்பிலும் இந்தியா முத்திரை பதிக்க வேண்டும்.
இந்தியாவில் பொதுப்பெயர் மருந்துகளை தயாரிக்க அதிகபட்சமாக 3500 நிறுவனங்களும், 10500 தொழிற்சாலைகளும் உள்ளன.
அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 4 மாத்திரைகளில் 1 மாத்திரை இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகும்.
உலக அளவில் பயன்படுத்தப்படும் 5 மாத்திரைகளில் 1 மாத்திரை இந்தியாவில் தயாரிக்கப்பட்டது.
இதனால் இந்தியாவில் காப்புரிமை பெற்ற மருந்துகளின் உற்பத்தியை அதிகரிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
Comments
Post a Comment