இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் வரலாறு
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் வரலாறு
பெயர்: எலிசபெத்
அலெக்சாந்திரா மேரி
தந்தை: யோர்க்
கோமகன் ஆல்பர்ட் (ஐக்கிய இராச்சியத்தின்
ஆறாம் ஜோர்ஜ் மன்னர்)
தாய்: எலிசபெத்
பிறப்பு: 21 ஏப்ரல் 1926
பிறந்த இடம்:
இலண்டன், மேஃபெயார்
பெயர் கரணம்: எலிசபெத் கொள்ளுப்பாட்டி அலெக்சாந்திரா, பாட்டி மேரி,
தாய் எலிசபெத் ஆகியோரின் பெயர்களைச் சேர்த்து எலிசபெத் அலெக்சாந்திரா மேரி என்று பெயர்
சூட்டப்பட்டார்
தனது நெருங்கிய
குடும்பத்தினரால் 'லில்லிபெத்' என்று அழைக்கப்பட்டார்.
கணவர்: பிலிப், எடின்பர்க் பிரபு
குழந்தைகள் : இவர்களுக்கு மூன்றாம் சார்லசு; இளவரசி ஆன், யோர்க் கோமகன் இளவரசர் ஆண்ட்ரூ,
வெசெக்சு கோமகன் இளவரசர் எட்வர்ட் என நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
ராணியாக முடிசூடப்பட்டது: 1952 பெப்ரவரி 6 முதல் 2022 இல் இறக்கும் வரை ஐக்கிய
ராஜ்ஜியத்தின் அரசியாக இருந்தார்
மொத்த ஆட்சிக்காலம்: 70 ஆண்டுகள், 214 நாட்கள்
பிறப்பு &
இளமைக்காலம்
எலிசபெத் 1926 ஏப்ரல் 21 02:40 (கிரீனிச் நேரம்), அவரது தந்த-வழிப் பாட்டனார் ஐந்தாம்
சியார்ச்சின் ஆட்சிக் காலத்தில் பிறந்தார். தந்தை இளவரசர் ஆல்பர்ட், யோர்க் கோமகன்
(பின்னர் ஆறாம் சியார்ச்), மன்னரின் இரண்டாவது மகன் ஆவார். தாயார், எலிசபெத், யோர்க்
கோமாட்டி (பின்னர் எலிசபெத் போவ்சு-லயோன்), இசுக்காட்லாந்தைச் சேர்ந்த பிரபு கிளௌட்
போவ்சு-லியோன். எலிசபெத் இலண்டனில் மேஃபெயார் என்ற இடத்தில் உள்ள அவர்களது
இல்லத்தில் அறுவைசிகிச்சை மகப்பேறு மூலம் பிறந்தார் இவர் ஆங்கிலிக்க யோர்க் ஆயர்
கோசுமோ கோர்டன் லாங் என்பவரால் பக்கிங்காம் அரண்மனையில் உள்ள ஒரு தனிப்பட்ட
தேவாலயம் ஒன்றில் மே 29 இல் திருமுழுக்கு செய்யப்பட்டு, தாயார் வழியே எலிசபெத் என்றும்;
தந்தை-வழி பூட்டி வழியே அலெக்சாந்திரா என்றும்; தந்தை-வழிப் பாட்டி வழியே மேரி என்றும்
பெயரிடப்பட்டார். அவர் தன்னை குழந்தையாக இருக்கையில் அழைத்ததன்
அடிப்படையில், அவரது நெருங்கிய குடும்பத்தினரால் "லிலிபெட்" என்று
அழைக்கப்பட்டார் எலிசபெத் தனது தாத்தா ஐந்தாம் சியார்சால் போற்றப்பட்டார், அவரை
எலிசபெத் "தாத்தா இங்கிலாந்து" என்று அன்புடன் அழைத்தார். எலிசபெத்துடன் கூடப் பிறந்த
ஒரேயொருவர் இளவரசி மார்கரெட் 1930 இல் பிறந்தார். இரண்டு இளவரசிகளும் தங்கள்
தாயினதும் ஆசிரியை மரியன் கிராஃபோர்டினதும் மேற்பார்வையின் கீழ் வரலாறு, இலக்கியம்,
மொழி, இசை ஆகியவற்றை வீட்டில் இருந்தே கற்றனர். கிராபோர்ட் இரு இளவரசிகளினதும்
சிறுவயது வாழ்க்கை வரலாற்றை தி லிட்டில் பிரின்சஸ் என்ற தலைப்பில் 1950 இல் வெளியிட்டார்,
இது அரச குடும்பத்தை திகைக்க வைத்தது. எலிசபெத்தின் குதிரைகள், நாய்கள் மீதான காதல்,
அவரது ஒழுங்குமுறை மற்றும் பொறுப்புணர்வின் அணுகுமுறை ஆகியவற்றை புத்தகம்
விவரிக்கிறது.
திருமணம்
எலிசபெத் தனது வருங்காலக் கணவரான பிலிப்பை முதன் முதலாக 1934 இலும், பின்னர் 1937 இலும் சந்தித்தார்.
விக்டோரியா மகாராணி மூலம் மூன்றாவது முறையான உறவினர்களும் ஆவர்.
`
1939 சூலையில் டார்ட்மவுத்தில் உள்ள அரச கடற்படைக் கல்லூரியில் மூன்றாவது முறையாக
சந்தித்தார், 13 அகவை கொண்ட எலிசபெத் தான் பிலிப்பை காதலிப்பதாகக் கூறினார், அவர்கள்
இருவரும் கடிதங்களைப் பரிமாறிக் கொள்ளத் தொடங்கினர். அவர்களது திருமண உறுதி 1947
சூலை 9 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டபோது அவருக்கு அகவை 21 ஆகும்திருமண
உறுதியிலும் சர்ச்சைகள் கிளம்பின. பிலிப்புக்கு நிதி நிலை எதுவும் இல்லை, இரண்டாம் உலகப்
போர் முழுவதும் அரச கடற்படையில் பணியாற்றிய பிரித்தானியக் குடிமகன் என்றபோதும்,
வெளிநாட்டில் பிறந்தவர், நாட்சிகளுடன் தொடர்பு கொண்ட செருமனியப் பிரபுக்களை மணந்த
சகோதரிகள் இருந்தனர்.
திருமணத்திற்கு முன்பு, பிலிப் தனது கிரேக்க, தென்மார்க்குப் பட்டங்களைத் துறந்தார்,
அதிகாரப்பூர்வமாக கிரேக்க மரபுவழியிலிருந்து ஆங்கிலிகனிசத்திற்கு மாறினார்,
அத்துடன் லெப்டினன்ட் பிலிப் மவுண்ட்பேட்டன் என்ற மரபை ஏற்றுக்கொண்டார், அவரது தாயின்
பிரித்தானியக் குடும்பத்தின் குடும்பப் பெயரைப் பெற்றார் எடின்பரோ கோமகன் என்ற பட்டப்
பெயரையும் திருமணத்திற்கு முன்னர் பெற்றார். எலிசபெத்தும் பிலிப்பும் 1947 நவம்பர் 20
இல் வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் திருமணம் செய்துகொண்டனர். எலிசபெத் தனது
திருமணத்திற்கான ஆடைகளுக்கான பொருட்களை வாங்குவதற்கு பங்கீட்டு அட்டைகள்
தேவைப்பட்டது. ஆடை நார்மன் ஹார்ட்னெல் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. பிலிப்பின்
மூன்று சகோதரிகள், திருமணத்திற்கு அழைக்கப்படவில்லை அத்துடன் முன்னாள் எட்டாம்
எட்வர்டு மன்னராக இருந்த வின்ட்சர் பிரபுவுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.
குழந்தைகள்
எலிசபெத் தனது முதல் குழந்தையான இளவரசர் சார்லசை 1948 நவம்பர் 14 இல் பெற்றெடுத்தார்.
சார்லசு பிறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர், அரச இளவரசர் அல்லது இளவரசியின் மரபையும்
பட்டத்தையும் எலிசபெத்தின் குழந்தைகளுக்குப் பயன்படுத்த அனுமதித்து, அரசர் ஆறாம்
ஜோர்ஜ் காப்புரிமைக் கடிதங்களை வழங்கினார்.
இரண்டாவது குழந்தை, இளவரசி ஆன் 1950 ஆகத்து 15 இல்
பிறந்தார்.
ஆட்சி
6 பிப்ரவரி 1952 அன்று தந்தை ஆறாம் ஜார்ஜ் உடல் நலக்குறைவால் மரணமடைந்ததைத் தொடர்ந்து,
எலிசபெத் ஐக்கிய ராச்சியத்தின் மகாராணியானார். இரண்டாம் எலிசபெத் மகாராணியாக அவரது
முறையான முடிசூட்டு விழா ஜூன் 2, 1953 அன்று வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெற்றது.
1952 ஆம் ஆண்டு ராணி இரண்டாம் எலிசபெத் அரியணை ஏறியதிலிருந்து, ஏழு நாடுகளைக்
கொண்ட சிறிய குழுவிலிருந்து காமன்வெல்த்தை "உலகின் ஒவ்வொரு கண்டத்திலும் பரவியுள்ள
56 நாடுகளின் குடும்பமாக" விரிவுபடுத்தினார்,. டிரஸ் "நாங்கள் இப்போது ஒரு நவீன, செழிப்பான,
ஆற்றல்மிக்க தேசமாக இருக்கிறோம்," என்று கூறினார்.
உலகையே உள்ளங்கையில் வைத்து ஆட்சி செய்த பெயர் இங்கிலாந்துக்கு உண்டு. அந்த நாட்டிற்கு 70 ஆண்டுகளாக ராஜ மாதாவாக
இருப்பவர் தான் இரண்டாம் எலிசபத் மகாராணி. ஜனநாயகம் தழைத்தோங்கும் காலத்திலும் இங்கிலாந்து
ராஜ குடும்பம் மட்டும் வசீகரம் குறையாமல் அப்படியே இருக்கிறது. இதற்கு இரண்டாம் எலிசபத்
ராணியின் புரட்சிகளும் காரணம் தான். ராஜா, ராணி மட்டுமே வரி வசூலித்த காலம் போய், அரசாங்கத்திற்கு
ராஜ குடும்பம் வரி செலுத்தும் முறையையும் நடைமுறைப்படுத்தினார் இரண்டாம் எலிசபத் ராணி.
அதுமட்டுமல்ல தனது மாளிகைக்கு உட்பட்ட பகுதியை தனி நாடாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள்
வந்தபோதும் கூட அதை பொது வாக்கெடுப்பு மூலம் எதிர்கொண்டு சர்வதேச கவனத்தைப் பெற்றார்.
உணையில் இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எலிசபத்துக்கு வானளாவிய அதிகாரங்கள் இருந்தும்
கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சிக்கு தலை வணங்கி வாழ்ந்து வருபவர் எலிசபத்
ராணி. எல்லோரையும் ஜனநாயகப்படுத்தும் அவரது அணுகுமுறைக்கு ஜனநாயக நாடுகளிலும் வரவேற்பு
உண்டு
இறப்பு
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். சில நாட்களுக்கு முன்னர்
புதிய பிரதமர் லிஸ் ட்ரஸுக்கு முறைப்படி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கடந்த அக்டோபர்
மாதம் முதலே 96 வயதாகும் ராணி எலிசபத்துக்கு அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது.
நிற்க, நடக்க சிரமப்பட்டு வந்த அவர் ஸ்காட்டிஷ் அரண்மனையில் சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமாகி 08.09.2022 அன்று
காலமானார்.
கருத்துகள்
கருத்துரையிடுக